தமிழ்நாடு

இந்தியா-பாகிஸ்தான் போர்: 50-வது வெற்றி தினம்; உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்தில் கொண்டாட்டம்

kaleelrahman

1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்தில் தீப ஜோதி கோப்பையை கொண்டுவந்து கொண்டாடப்பட்டது.

1971-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில், ஸ்வர்ணம் விஜய் வர்ஷா தீப நினைவு ஜோதி கோப்பை தூத்துக்குடி கட்டபொம்மன் கடற்படை தளத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-ம் ஆண்டு வெற்றி தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.

இதில் கடற்படையை சேர்ந்த வீரர்கள் தீப நினைவு ஜோதி கோப்பையை ஏந்தியபடி வாகனத்தில் வலம் வந்தனர். இதையடுத்து உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திலிருந்து ராணுவ வீரர், தீப ஜோதி கோப்பையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து நாளை ராமேஸ்வரம், அப்துல்கலாம் நினைவிடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தீப நினைவு ஜோதி கோப்பையை கொண்டு செல்ல உள்ளனர்.

மேலும் தீப நினைவு ஜோதி கோப்பையை உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்தில் வைத்து, போரில் கலந்து கொண்ட முன்னாள் வீரர்கள் போரில் உயிரிழந்த வீரர்களை , கடற்படை அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர். பின்னர் செய்தியாளர் சந்தித்த கமாண்டர் வெங்கடேஷ் ஐயர் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து விரிவாக்கப்படும் என்றும், ரோந்து பணியை தீவிரப்படுத்த முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.