தமிழ்நாடு

மதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..!

மதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..!

webteam

மதுரையில் பெய்து வரும் மழையால் பயணிகள் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்திருந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் வடகிழக்கு பருவமழை வரும் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல மதுரையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதில்,“மதுரையில் மழை பெய்து வருவதால் பயணிகள் தங்களின் விமான நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களின் விமான நேரத்தை குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலாமாகவோ தெரிந்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.