இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு நடுக்கடலில் முழ்கியது, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆறு மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் கங்கேசன்தறை போலிஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மழுன் பிடிக்க சென்ற பாலமருகன்,கடல்ராஜா,முத்துபாண்டி,திருமேனி,முருகன்,முத்து ஆகிய ஆறு மீனவர்களும் நெடுந்தீவுக்கும் கோவிலாம் லைட்ஹவுஸ் பகுதிக்கும் இடையே 15 நாட்டிக்கள் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறை காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதி முற்றிலும் சேதமடைந்து நடுக்கடலில் முழ்கியது
நடுக்கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விரைவு ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டனர், மீட்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்று முதலுதவிகள் வழங்கப்பட்டு பின்னர் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனா. விசாரணையில் மீனவர்கள் காற்றின் காரணமாகவே எல்லை தாண்டி வந்ததாக தெரிய வந்ததையடுத்து அவர்கள் மீது எல்லை தாண்டிய வழக்க பதிவு செய்யாமல், உயிரை காப்பாற்றி கொள்ளவே இலங்கை பகுதிக்கு வந்ததாக முதல் தகவல் அறிக்கை போலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது