படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோர காவல்படை மீட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படை வழக்கம் போல் தனது கண்காணிப்பு பணியில் நேற்றும் ஈடுபட்டிருந்தது. அப்போது, காரைக்காலில் இருந்து 10 நாட்டிகல் மைல் தூரத்தில் மீனவர் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதை கடற்படை வீரர்கள் கண்டனர். படகு கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த மீனவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இரண்டு பேரையும் கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர். இத்தகவலை இந்திய கடலோர காவல்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று இந்திய கடலோர காவல்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.