தமிழ்நாடு

அஸாம் பனிப்பொழிவில் சிக்கிய 1,500 சுற்றுலாப் பயணிகள்

jagadeesh

அஸாம் பனிப்பொழிவில் சிக்கிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர். அசாமில் உள்ள நாது லா பாசிலிருந்து சோம்கோ ஏரி வழியாக சுற்றுலாப் பயணிகள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டன.

தகவல் அறிந்த ராணுவம் துரிதமாக செயல்பட்டு 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது முகாமில் உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தங்க வைத்துள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்த பின்னர் காங்கடாக் பகுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.