தமிழ்நாடு

உலகிலேயே கருப்பு பூஞ்சை பாதிப்பு இந்தியாவில்தான் அதிகம் - வல்லுநர் குழு

JustinDurai
தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட குறைவு என சிறப்பு மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 11 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறப்பு குழுவினர், ''முதலில், பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மக்கள் வந்தனர். தற்போது, ஆரம்ப நிலையிலேயே மக்கள் வருகின்றனர். பாதிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதால், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்த நோய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வித்தியாசமான முறையை கையாள்கிறது.
மேலும், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில்தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளது. கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது. உலகிலேயே இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம்'' எனத் தெரிவித்தனர்.