rn.ravi
rn.ravi pt desk
தமிழ்நாடு

”யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறுவது சனாதனம்; தீண்டாமையை வலியுறுத்தவில்லை” - ஆளுநர் ஆர்என்.ரவி

webteam

சென்னை திருவல்லிக்கேணியில் ஜெகத்குரு ஶ்ரீமன் மத்வாச்சாரியார் மூல மகா சமஸ்தானத்தின் 50வது ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி...

”தமிழ்நாடு என சொல்லும் இந்த இடத்தில் இருந்தே பல ஆன்மிக சிந்தனையாளர்கள் உருவாகி உள்ளனர். தமிழகத்தில் இருந்தே சனாதனம் உருவாகி அது பாரதம் முழுவதும் சென்றது. மனித நேயத்தையும், ஒற்றுமை குறித்தே இங்கிருந்து வந்த ஆன்மிகவாதிகள் பேசினார்கள், இந்தியா 1947ஆம் ஆண்டு உருவானது என்று பலர் பேசும் கருத்து நகைச்சுவையான ஒன்று.

PM Modi

இந்தியா ஒரு சனாதன நாடு. சனாதனம் தீண்டாமையை வலியுறுத்துகிறது என்றும், பாகுபாட்டை வலியுறுத்துகிறது என்றும் கூறுகின்றனர். ஆனால், சனாதனம் மனிதர்களுக்குள் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.

இந்த உலகத்தில் வாழும் அனைவரும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறும் சனாதனம் மனிதர்களிடையே தீண்டாமையை எப்படி வலியுறுத்தும். இந்த நாடு சனாதன கொள்கைகளை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடித்து வாழ்ந்து வருகிறது. வேற எந்த நாட்டிற்கும் இப்படி ஒரு சிறப்பம்சம் இல்லை.

ஆளுநர் ரவி

இந்த உலக ஒரு குடும்பம் என சனாதனம் கூறுகிறது. பாரத் என்றால் என்ன என புரிந்துகொண்ட ஒரு பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டில் பல சேதங்களை உருவாக்கி உள்ளனர், எனவே இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் பொருள் அளவில் மட்டும் இருக்கக் கூடாது. அறிவியல் ரீதியாகவும், பொருளாதார அளவிலும் இந்தியா வளர்ந்து வருகிறது, பிரதமர் மோடி பேசினால் ஒட்டுமொத்த நாடுகளும் உற்றுநோக்கி வருகின்றன.

உலகம் முழுவதும் பல பிரச்னைகள் தற்போது எழுந்துள்ளது, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இந்தியாவில் உள்ளது, அதற்கு இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மிகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என பேசினார்.