ஸ்டாலின் - இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு Pt web
தமிழ்நாடு

தொடங்கியது ஸ்டாலின் - இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு.. திமுக நிலைப்பாடு மாறுமா?

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினை சோனியா, ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அருகருகே ஸ்டாலின் - ராகுல்

சோனியா காந்தியை வரவேற்ற ஸ்டாலின்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் வாசல் சென்று வரவேற்றுள்ளார்.

ஸ்டாலின் இல்லத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்கள்!!

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர்கள் இல்லத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் சென்றிருக்கிறார்கள்.

வாசலில் காத்திருக்கும் உதயநிதி, தமிழச்சி!

ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களை வரவேற்க வீட்டின் வாசலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழச்சி, கலாநிதி மாறன் ஆகியோர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கோ பேக் காங்கிரஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்திக்கவுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு GO BACK CONGRESS என கருப்புப் பலகை காட்டி GEN Z திமுக நிர்வாகி எதிர்ப்பு

ஸ்டாலின் - இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் போது, மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரளிக்கவிருப்பதாக திமுக தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், மக்களவையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திமுக இந்த மசோதாவை ஆதரிக்கும் பட்சத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

இதற்கிடையில் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்தச்சூழலில் தான், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின், இல்லத்திற்கு ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, மம்தா பானர்ஜி, வேணுகோபால், சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இண்டிய கூட்டணி தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.