தமிழ்நாடு

இனிப்புக்கு பதிலாக ஆட்டோக்களுக்கு பெட்ரோல் நிரப்பி சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இனிப்புக்கு பதிலாக ஆட்டோக்களுக்கு பெட்ரோல் நிரப்பி சுதந்திர தின விழா கொண்டாட்டம்

JustinDurai
குன்றத்தூர் அருகே இனிப்புக்கு பதிலாக ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் ஊற்றி நூதன முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நலவாழ்வு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மரியாதை செலுத்தினார்.
பொதுவாக சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது அனைவருக்கும் இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் இவ்விழாவின்போது இனிப்புக்கு பதிலாக ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் ஊற்றி நூதன முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நலவாழ்வு சங்கத்தினர் கூறுகையில், ''நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் மீதான மாநில வரியை தமிழக அரசு மூன்று ரூபாய் குறைத்துள்ளது.
எனவே மத்திய அரசும் பெட்ரோல் விலை மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு இனிப்புக்குப் பதிலாக அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினோம்'' என்றனர்.