தமிழகத்தில் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் 2017ஆம் ஆண்டை விட, 2018ஆம் ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து இருப்பது காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு மூலம் தெரிய வந்துள்ளது
2019-20 ஆண்டுக்கான தமிழ்நாடு காவல்துறை மானியக் கோரிக்கையில்,இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை பிரிவில் போக்சோ சட்டதின் கீழ் ஆயிரத்து 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பாலியல் தொந்தரவு போன்ற மற்றவகையான குற்றங்களுக்கு 433 வழக்குகள் என ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2018ஆம் ஆண்டு போக்சோ சட்டதின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2 ஆயிரத்து 045 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பாலியல் வன்கொடுமை பிரிவில் பதிவான வழக்கு மட்டும் ஆயிரத்து 464. மற்ற வகையான போக்சோ சட்ட வழக்குகள் 581 என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.