சேலம் மாவட்டம் சேர்வராயன் வனப்பகுதியில் புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தலைமையில் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி துவங்கி நடைப்பெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி நிறைந்த சேர்வராயன் மலை, கருங்காலி, டேனிஸ்பேட்டை, மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. வனவிலங்குகள் வந்து செல்லும் பாதை, அங்கு பதிவான கால் தடங்கள், தண்ணீர் அருந்தும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, என்னென்ன வனவிலங்குகள் உள்ளன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்றோடு வரை மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு பணி முழுமையாக நிறைவடைந்த பின்னர் அறிக்கை தயாரித்து மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.