ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செந்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தலமலை வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட செந்நாய்கள், தற்போது பவானி சாகர், தெங்குமரஹடா, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. வேட்டை விலங்கான செந்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வனத்தின் சமநிலையை வரும் ஆண்டுகளில் பாதுகாக்க முடியும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.