தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசுப் பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Veeramani

தமிழ்நாடு அரசு பேருந்துகளின் பயன்பாட்டுக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 9 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகளின் ஆயுட்காலத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது 19 ஆயிரத்து 500 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 12 லட்சம் கிலோ மீட்டரோ அல்லது 7 ஆண்டுகளோ ஓடியிருந்தால் அதன் பயன்பாட்டை நிறுத்திக்கொள்வது வழக்கமாக இருந்துவருகிறது. இந்நிலையில் பேருந்துகளின் பயன்பாட்டுக்காலம் 9 ஆண்டு அல்லது 12 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கான வரம்பு 3 ஆண்டுகள் என்பது 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சாலை வசதிகள் மேம்பட்டுள்ளதுடன், பேருந்துகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு தரமான உதிரி பாகங்கள் இருப்பதால் பயன்பாட்டுக்காலத்தை அதிகரிக்கும் முடிவு மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் எடுக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.