தமிழ்நாடு

வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

Rasus

தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல்காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக வடதமிழகத்தின் உட்புற பகுதிகளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 வரை குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையின் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக அடையார், தியாகராயர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை அய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.