தமிழ்நாடு

''தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு'': நீதிபதிகள் வேதனை

''தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு'': நீதிபதிகள் வேதனை

webteam

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நிர்பயா நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.

நிர்பயா நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெறுவதில் தமிழக அரசு முனைப்புக் காட்டவில்லை எனக் கூறி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் ரமேஷ், தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஆராய்ந்த நீதிபதிகள் தனியாக இருக்கும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவது, வழிப்பறி செய்வது, அவர்களை கொலை செய்வது உள்ளிட்ட குற்றச் செயல்கள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட விவரங்களை 6 வார காலத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.