தமிழ்நாடு

2 நாட்கள் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்

2 நாட்கள் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகம் மற்றும் புதுவையில் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கேரளா மற்றும் கர்நாடகா பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுகுறைந்த நிலையில் காணப்படுகிறது. தமிழக பகுதியில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ள நிலையில் மேகமூட்டம் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றில் இருந்து நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட இரண்டில் இருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் பதிவாகி உள்ளது. இந்த நிலை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.