தமிழ்நாடு

ரூ.4,639 கோடி வரி ஏய்ப்பு: புள்ளி விவரங்களை வெளியிட்ட வருமான வரித்துறை

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த நிதியாண்டு முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 639 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரி புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

வருமான வரி தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் பல்வேறு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட வருமான வரி புலனாய்வு சோதனையில் 1,429 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்துகள் தடை சட்டம் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதன் மூலம் 433 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த நிதியாண்டில் 100 சோதனைகள் நடத்தப்பட்டதன் மூலம் 3,210 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.