தமிழ்நாடு

இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை : ரூ.15 கோடி பறிமுதல் ?

webteam

பிரபல ஜவுளி நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் கணக்கில் வராத‌ 15 கோடி ரூபாய் ‌பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய், ரேவதி குரூப், ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம், லோட்டஸ் குரூப்ஸ் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் சென்னையில் 72 இடத்திலும், கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் உரிமையாளரின் கடைகள், வீடு, அலுவலகம், கெஸ்ட்ஹவுஸ் போன்ற இடங்களில்  நடைபெற்று வரும் வருமானவரி சோதனையில் கணக்கில் வராத‌ 15 கோடி ரூபாய் ‌பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும் இந்த வருமானவரித்துரையினர் சோதனை 2-வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் சோதனைக்கு உள்ளான நி‌றுவனங்களின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.  வரி ஏய்ப்புப் புகாரில் 1000 திற்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்தச் சோதனையை நடந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.