சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு உள்பட 150-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர் வீடுகள், அவரது அலுவலகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானத் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீட்டுக்குள் டிடிவி தினகரன் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு முன் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசுதான் இந்த சோதனைக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.