தமிழ்நாடு

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

Rasus

நடிகையும் சரத்குமார் மனைவியுமான ராதிகாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமாரின் வீடு உள்பட தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 இடங்களில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனிடையே வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நுங்கம்பாத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

இதனிடையே, நேற்று சரத்குமாரின் மனைவிக்கு சொந்தமான ராடான் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் ராதிகாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராகும்படி அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் ஆஜராகும்படி சரத்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.