தமிழ்நாடு

ஃபரிதா குழுமம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

webteam

ஃபரிதா குழுமம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வருமான வரித்துறை பல்வேறு தொழில் அதிபர்கள், சினிமா பைனான்சியர்கள்  வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடு என்ன பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை செய்தது. இந்த நிலையில் தோல் நிறுவனங்களில் ஒன்றான ஃபரிதா குழுமம் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

வேலூரை மையமாகக் கொண்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் 50 க்கும் மேற்பட்ட  இடங்களில் இந்த  சோதனையானது தற்போது நடைபெற்று வருகிறது. ஃபரிதா குழுமம் தொடர்புடைய  அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வேலூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, சென்னை ராமாபுரத்தில் ஃபரிதா குழுமம் தொடர்புடைய  இடங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் ராமாபுரத்தில் அதன் நிறுவனத்துக்கு சொந்தமான முக்கிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது.மேலும் நுங்கம்பாக்கம் பெரியமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஃபரிதா குழுமத்தின் தலைவர்   ரஃபீக் மக்கா பத்மஸ்ரீ விருதை பெற்று இருகிறார். தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மற்றும் பல சங்கங்களின் தலைவராகவும்  இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கோவில்பட்டி: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை! முன் விரோதம் காரணமா என விசாரணை