முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, பெங்களூரு, மும்பை, சிக்மங்களூர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள், கடைகள், காஃபி தோட்டங்களில் ஒரே நேரத்தில் இச்சோதனை நடைபெற்றது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தா, காஃபி டே கஃபே என்ற பெயரில் கடைகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் பெரிய அளவில் வருமான வரி சோதனைகள் நடந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது.