தமிழ்நாடு

அரசு நலத்திட்ட உதவி பெற வருமான வரம்பு அதிகரிப்பு

அரசு நலத்திட்ட உதவி பெற வருமான வரம்பு அதிகரிப்பு

webteam

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் நிதியுதவி பெறுவதற்கான வருமான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் திருமண நிதியுதவி உள்பட தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கிழ் உதவி பெறுவதற்கான ஆண்டு வருமா னம் ரூ 24 ஆயிரமாக இருந்தது. இப்போது இந்த வருமானத்தை ரூ. 72 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள து. மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட நிதியுதவி பெறவும் வருமான வரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.