தமிழ்நாடு

அலைகள் ஆர்ப்பரித்து சீற்றத்துடன் காணப்படும் திருவொற்றியூர் கடல்

அலைகள் ஆர்ப்பரித்து சீற்றத்துடன் காணப்படும் திருவொற்றியூர் கடல்

JustinDurai
திருவொற்றியூரில் கடல் அலைகள் ஆர்ப்பரித்து சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நெருங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், திருவொற்றியூர் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. பலத்த காற்று வீசி வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புச்சுவரை தாண்டி கடல் அலைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கனமழை குறித்த அறிவிப்பும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவிக்கப்பட்டுள்ளது.