தமிழ்நாடு

திருவள்ளூர்: பள்ளி வகுப்பறையில் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

திருவள்ளூர்: பள்ளி வகுப்பறையில் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

JustinDurai
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொற்றலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பள்ளி வகுப்பறை ஒன்றில் 10 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
கொற்றலை ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தால், சொரக்காய்பேட்டை கிராமம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், மண் அரிப்பு காரணமாக அங்குள்ள மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பள்ளிக் கட்டடம் முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதாக அச்சம் தெரிவிக்கும் கிராம மக்கள், சிதலமடைந்த பள்ளியை சீரமைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.