சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே நிவாரணம் கிடைக்கும் என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை நடுக்குப்பத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மீன்சந்தை உள்ளிட்ட பகுதிகளை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வுசெய்தார். வன்முறையால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து எடுத்துக் கூறிய மீனவ மக்கள், மீன் சந்தை அமைத்து தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.