தமிழ்நாடு

“சங்கு வளையல்கள், கல் மணிகள்”- கீழடியில் தோண்ட தோண்ட சிக்கும் அரிய பொருட்கள்..!

“சங்கு வளையல்கள், கல் மணிகள்”- கீழடியில் தோண்ட தோண்ட சிக்கும் அரிய பொருட்கள்..!

PT

கீழடியில் நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட அகழாய்வில் ஏராளமான சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் குறித்து அறியும் வகையில் அகரத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் பல்வேறு வடிவிலான  10 சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், கல் மணிகள் உள்ளிட்ட அணிகலன்களும், சிற்பிகள், நத்தை கூடுகள் உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக கீழடியில் கண்டறியப்பட்டுள்ள விலங்கு எலும்பு கூடானாது முழுமையாக அகற்றி எடுக்கப்பட்ட பின்னர், விரைவில் புனேவில் உள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரிக்கு பகுப்பாய்விற்காக அனுப்பப்பட உள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.