குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள மினி ஏரியில், மு.க.ஸ்டாலின் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள மினி ஏரியில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் படகு சவாரி மேற்கொண்டார். கடந்த மூன்று நாட்களாக குன்னூரில் தங்கியுள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தமிழக அமைச்சர் ராமசந்திரன் ஆகியோருடன் சிம்ஸ் பூங்காவில் உள்ள மினி ஏரியில் படகு சவாரி செய்தார். அதன் பின் பழங்குடிகளான தோடார் இன மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார்.