தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ வழக்கில் தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜாக்டோ ஜியோ வழக்கில் தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

ஆசிரிய‌ர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையின்போது பேச்சுவார்த்தைக்காக அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.