தமிழ்நாடு

தமிழகம்: 14 இடங்களில் சதம்; வெயில் குறைய வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகம்: 14 இடங்களில் சதம்; வெயில் குறைய வாய்ப்பு - வானிலை மையம்

JustinDurai

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி பதிவாகியது.

அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சேலத்தில் 105 டிகிரி வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தருமபுரி, கோவில்பட்டி, மானாமதுரை, பெரியகுளம், திருத்தணியிலும் மேலும் கள்ளக்குறிச்சி, வேலூர், நெய்வேலி, செய்யாறிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி பதிவானது.

பல்வேறு இடங்களில் அனல்காற்றும் வீசியதால் மக்கள் அவதியடைந்தனர். இதனிடையே, தெற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் இருந்து  தமிழக பகுதிகளில் காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.