தமிழ்நாடு

புதுக்கோட்டை: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2,000 டன்னுக்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்!

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டியில் சட்ட விரோதமாக விற்பனைக்கு சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 2,038 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர், மேலும் அதே கிராமத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 636 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து குடிமை பொருள் வழங்கள் குற்றப் பலனளித்துறை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தனிப்படை வட்டாட்சியர் வரதராஜனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில் இன்று தனிப்படை வட்டாட்சியர் வரதராஜன் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கே.புதுப்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே பொலிரோ பிக் வாகனத்தில் 2038 கிலோ ரேசன் அரசி சட்ட விரோதமாக கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த சரக்கு வாகனத்தை வட்டாட்சியர் மற்றும் போலீசார் மடக்கி பிடித்த போது அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பி சென்றார். இதனையடுத்து 2038 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து குடிமை பொருள் வழங்கல் குற்ற பொருளாளர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதன்பின்பு தகவலின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள கைலாசம் என்பவர் வீட்டில் வட்டாட்சியர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது மேலும் 634 கிலோ ரேஷன் அரிசி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனையும் பறிமுதல் செய்த வட்டாட்சியர், ரேஷன் அரிசி பதுக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட கைலாசத்தை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தார்.

இவன் பின்பு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 டன் மதிப்பிலான ரேஷன் அரிசிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்த குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கொண்டு வந்ததோடு கைலாசத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.