தமிழ்நாடு

பாத்ரூம் சுத்தம் செய்யும் பள்ளி மாணவிகள்: விடுதியில் நடக்கும் கொடுமை!

பாத்ரூம் சுத்தம் செய்யும் பள்ளி மாணவிகள்: விடுதியில் நடக்கும் கொடுமை!

webteam

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு விடுதியில் தங்கிப் பயிலும் மா‌ணவிகளை, விடுதி நிர்வாகத்தினர் வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுதியில் சமையல் வேலை செய்யும் ராதாமணி, தனலட்சுமி ஆகியோர், தங்களை சமையல் அறை, குளியல் அறை மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்துவதாக மாணவிகள் குற்‌றம்சாட்டுகின்றனர். விடுதி ஊழியர்களின் இந்தக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, அருகில் உள்‌ள நகராட்சி மேல்நிலைப்ப‌ள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகள், தலைமை ஆசிரியருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளனர்‌. விடுதியில் தங்கி பயில முடியாத நிலை இருப்பதால், மாற்றுச் சான்றிதழ் வழங்கும்படி அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள‌னர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் நசுருதீன் விசாரணை‌ நடத்தி வருகின்றார்.