தமிழ்நாடு

மதுரை: கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு - ரூ.165 கோடி பணம் பறிமுதல்

webteam

மதுரையில் பிரபல கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

மதுரையின் பிரபல கட்டுமான நிறுவனங்களான அன்னை பாரத், ஜெயபாரத், கிளாட்வே, கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவன அழுவலகங்கள் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் அழகர், ஜெயகுமார், முருகன், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோரது வீடுகள் என 20 இடங்களில் 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனை இன்று மாலையுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்த கட்டுமான நிறுவனங்கள் வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில்  கணக்கில் காட்டப்படாத 14 கிலோ தங்கம், 165 கோடி ரூபாய் பணம், 235 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்ட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்