தமிழ்நாடு

கோவை: கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேர் கண் பார்வை இழப்பு-மருத்துவமனை டீன் தகவல்

JustinDurai
கோவை மாவட்டத்தில் 390 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 30 பேர், ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா.
இதுதொடர்பாக 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில் நிர்மலா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 390 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 113 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு தாமதமாக வந்ததால் 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர்.
கருப்புப் பூஞ்சை பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பார்வை இழப்பை தவிர்க்கலாம். கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மூக்கடைப்பு, கண் வலி, பார்வை குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்'' என்று கூறினார்.