தமிழ்நாடு

ரயில் படிக்கட்டில் தொங்கி சாகசம் - உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பும் ரயில்வே போலீஸ்

webteam

சென்னையில் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் இளைஞர்களை பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர் ரயில்வே போலீசார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் குறிப்பாக செங்கல்பட்டு, தாம்பரம், வேளச்சேரி, திருவள்ளூர், ஆவடி, பகுதியில் இருந்து வரக்கூடிய மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் இளைஞர்களை எச்சரிக்கை செய்து இனிமேல் படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் ரயில்வே போலீசார்.

செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்துவந்த மின்சார ரயிலில் ஒரு இளைஞர் படிக்கட்டில் நின்றவாறு ஸ்கேட்டிங் செய்வதுபோல மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டு வந்த இளைஞரை  பிடித்து எச்சரிக்கை செய்தனர்.

சமீபத்தில் ரயில் மேல் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை ரயில்வே போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிக்க: சம்பளத்தை உடனே கொடு: போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா துணை நடிகர்களால் பரபரப்பு