வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், இன்று (சனிக்கிழமையன்று) கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மட்யிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி தீவிர கனமழை, சூறைக்காற்று உள்ளதால், அதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அரசு முகாம்கள் பல அமைத்துள்ளன. இந்நிலையில் மழை தொடர்பாகவும், பாதிப்புகள், முன்னெச்சரிக்கைகள், நடவடிக்களைகள் தொடர்பாகவும், உடனடி செய்திகளை இங்கே காணலாம்...
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுவட்டார தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
கல்பாக்கத்தில் இருக்கும் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், ஆரோவில், கோட்டகுப்பம் கடற்கரை சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 222 நீச்சல் வீரர்கள் மற்றும் 26 பாம்புபிடி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஜேசிபி வாகனங்கள், 12 பொக்லைன் மற்றும் ரப்பர் படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலையொட்டி வண்டலூர் பூங்கா செயல்படாது என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புயல் காரணமாக, கல்பாக்கத்தில் 15 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்புகின்றன. மேலும், கோவளம், புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் கடல் சீற்றமும், சூறைக்காற்றும் காணப்படுகிறது.
தீவிர மழையை கொடுக்கக்கூடிய மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..இதனால், சென்னையில் ஒரு சில இடங்களில் அதி கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கொடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்திருந்தநிலையில், கரையை கடக்க இரவு 7 மணியாகும் என்று தாமதாமாகும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து 190 கிமீ கிழக்கே தென்கிழக்கேயும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 190 கிமீ திசையிலும் புயலானது மையம் கொண்டுள்ளது.. இந்த புயலானது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நடந்துவருகிறது. இது நிலப்பகுதியை அடைய முற்படும்போது அரேபிய உயர் அழுத்தத்தின் தாக்கம் என்பது இருக்கும்.
இதன் காரணமாக நிலப்பரப்பின் அருகே வரும்போது புயலின் வேகம் என்பது மேலும் குறைந்து, கடற்கரை அருகே சிலமணி நேரம் மையம் கொள்வதற்கோ, அல்லது 2 ,3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதற்கோ வாய்ப்புகள் உள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில், புயல் கரையை கடப்பது மேலும், தாமதம் ஏற்பட்டு, இன்று இரவு 7 மணி அளவில்தான் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியில் கால்நீர் உள்ளே வந்துள்ளது. இதனால், மீன்பிடி வலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் காலை 10 மணி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கப்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும். மேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை,நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
இந்நிலையில், திருவாரூரில் இன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மாமல்லப்புரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புயல் கரையை கடக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது என்று சுயதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தகவலை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ” ஃபெஞ்சல் புயல் கடந்த சில நாட்களாகவே, இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. தற்போது நேற்றுமுதல்தான் நகர்ந்து வருகிறது. இதில், அரேபிய உயரழுத்தத்தின் தாக்கமும், பசிபிக் உயரழுத்தத்தின் தாக்கம் என இரண்டு தாக்கங்கள் இருக்கிறது.
அரேபிய உயரழுத்தத்தின் தாக்கம் நிலவுவதால், புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டு,முன்னதாக புதுச்சேரியில் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.. ஆனால், சென்னைக்கும் - புதுவைக்கும் இடையே மரக்காணம் - மகாபலிபுரத்தில் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மழைப்பொழிவை பொறுத்தவரை குறுகிய காலத்தில் தீவிர மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்ப்பார்த்ததை விட அதிக மழைப்பொழிவு இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்த புயல் ஃபெஞ்சல் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்கிறது.. இதன்படி, வங்ககடலில் உருவான புயலின் வேகம் அதிகரித்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து 140 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. மேலும், இன்று மாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தநிலையில், தற்போது மாலையில்தான் புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையமே உறுதிப்படுத்தியுள்ளது..
புயல் கரையை நெருங்கும் நேரத்தில் புயலின் வேகம் என்பது மேலும் குறையும் என்றும் அல்லது கரையிலேயே நிலைத்து நிற்கவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதன் காரணமாகதான் இத்தகைய மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் மதியம் ஒருமணி வரைக்கும் கனமழை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், நொடிக்கு நொடி அது குறித்த செய்திகளை புதிய தலைமுறை வழங்கி வருகிறது. ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையின் பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செய்தியாளர்கள் இணைந்துள்ளனர்,. மழை நிலவரம், மழையால் ஏற்படும் பாதிப்புகள், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், தண்ணீர் தேங்கிய பகுதி, எப்படி வெளியேற்றப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் நொடிக்கு நொடி அளித்து வருகின்றனர்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். ஏற்கனவே தமிழக அரசு ஃபெஞ்சல் புயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் இடங்களில் கூடுதலான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவை அனைத்தையும் மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். புயல் இன்று மாலை கரையைக் கடக்கூடிய நிலையில், அந்தப்பாதையையும், ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்துவருகிறார். உடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்காணி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் இந்த ஆய்வில் உடனிருக்கின்றனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அது குறித்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.
நேற்றிரவு கடுமையான மழை பெய்தது. தொடர்ந்து பெய்தும் வருகிறது. இன்று இரவு கரையைக் கடக்கும் என செய்தி வந்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டோம். நிவாரணப்பணிகள் எந்த அளவுக்கு நடந்து வருகிறது என்பதையும் கேட்டு வருகிறோம். இன்று இரவு கடுமையான மழை பெய்யும் என காரணத்தால் முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர்” என தெரிவித்தார்.
சென்னை அசோக் நகர் பகுதி பாரதிதாசன் காலணியில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேங்கி இருக்கும் நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து 110 கிமீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல். இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
“கடலுக்கு மேலே புயல் நிலைகொண்டுள்ளதால் மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். மழை மேகங்கள் உருவாவதால் சென்னையில் மையப் பகுதிகளில் தீவிர மழை தொடரும்” சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
ஃபெஞ்சல் புயல் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தள பதிவு : #Fengal புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் @ChennaiRmc அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!
எனவே, எனது அறிவுறுத்தலின்படி, @AIADMKITWINGOFL சார்பில் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
புயல் கரையைக் கடக்க நாளை அதிகாலை வரை தாமதமாகலாம். புயல் கடற்கரை அருகே மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் - மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், “புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாகவே அரபிக் உயரழுத்தம், பசுபிக் உயரழுத்தம் என இருவேறு தாக்கங்கள் இருந்தது. தற்போது பசுபிக் உயரழுத்தம் காரணமாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும்போது, நிலபரப்பினை அடைய முற்படும்போது அரபிய உயரழுத்தத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். அப்படி ஆகும்பட்சத்தில் ஒரே இடத்தில் புயல் நிலை கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அப்படி புயல் ஒரே இடத்தில் நிலைகொள்ளும் பட்சத்தில் புயல் கரையைக் கடப்பதற்கான நிகழ்வு நாளை காலை வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக ஒரு இடத்தில் புயல் மையம் கொண்டால், அது நகர்ந்து வந்த பாதையில் இருந்து திசை மாறி நகரத்தொடங்கும். அப்படிப்பார்க்கும்போது, சென்னைக்கும் புதுவைக்கும் இடையே மரக்காணம் - மகாபலிபுரத்திற்கு அருகே ஒரே இடத்தில் மையம் கொண்டு, பின் நாளை காலை முதல் கரையைக் கடக்கத் தொடங்கி தெற்கு தென்மேற்காக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மழைப்பொழிவு சென்னையில் குறைந்திருந்தாலும், வரக்கூடிய மழை நேரங்களில் மழைப் பொழ்வு மீண்டும் அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதீத கனமழையும், குறைவான நேரத்தில் தீவிர மழைப்பொழிவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் வேகத்தினைப் பொறுத்தவரை தற்போதே பல இடங்களில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசுவதைப் பார்க்கிறோம். கடலிலேயே புயல் மையம் கொள்ளும்போது காற்றின் வேகம் அதிகரிக்காது. சற்று குறைவாகும். மழை மேகங்கள்தான் அடிக்கடி உருவாகி கரையை நோக்கி வரும். புயல் கரையைக் கடப்பதில் தாமதமடைகிறதே தவிர, அதன் தீவிரம் குறையவில்லை. புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது. அதன்காரணமாக மழைப்பொழிவு அதிகமாக உருக்கும்” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையில் கிட்டத்தட்ட 110 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இந்த சூழலை எதிர்கொள்ள முதலமைச்சர் தலைமையிலான அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது நகர பகுதி முழுவதும் கன மழை பெய்து வருகிறது
கன மழை காரணமாக சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
சற்று முன் பெஞ்சல் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் வீசிய பயங்கர காற்றால் கலங்கரை விளக்கம் பின்புறம் மெரினா சர்வீஸ் சாலை லூப் சாலை சந்திப்பில் அமைந்துள்ள மெரினா புறக்காவல் நிலையம் (Police Booth) சரிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. போலீஸ் பூத் முற்றிலும் சேதம்.
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 7:00 மணி வரை கனமழை பெய்யும்
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர்
சென்னையிலிருந்து 90 km தொலைவில் ஃபெஞ்சல் புயல் உள்ளது.. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.. மாலையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் மாமல்லத்தில் இருந்து 50 கி.மி தொலைவில் உள்ளது.
இன்று மாலையே புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புயல் கரைப்பகுதியை நெருங்கும்போது, அதன் வேகம் மிகமிகக் குறைந்து மெல்ல நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், “மகாபலிபுரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வரக்கூடிய மணி நேரங்களில் புயலின் நகரும் வேகமும் படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவில் கரையைக் கடக்கத் தொடங்கினாலும் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை முழுமையாக கரையைக் கடக்க எடுத்துக்கொள்ளும். புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் இந்த மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் இன்று இரவு மீண்டும் விட்டு விட்டு மழையை எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஏற்கனவே இன்று இரவு 7.30 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட நி்லையில், தற்போது நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளின் காரணமாக வங்கித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகளை ஒத்திவைத்தது IIB&F நிறுவனம்.. மேலும், வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிபு காரணமாக செனை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு
கடலூர் மாநகரில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாநில கட்டுப்பாட்டு மையத்தை மழைநீர் சூழ்ந்தது
ஃபெஞ்சல் புயல் காரணமாக கோவளம் கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது
வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயலின் முன் பகுதி கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. மாலை 5.30 மணிக்கே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தரையைத் தொட்டதில் இருந்து 3- 4 மணி நேரம் முழுமையாக கரையைக் கடக்க ஆகும் என சொல்லப்படுகிறது.
சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சென்னையில் இரவு 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் - இந்திய வானிலை மையம்
புயல் கரையை கடக்கும் நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறை காற்று வீசி வருகிறது.
மாமல்லபுரம் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் கடல் நீர் கடற்கரையை கடந்து குடியிருப்புபகுதி வரை உட்புகுந்த்புள்ளது.
”இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” - ஆளுநர் ரவி
சென்னையில் கனமழை தொடர்பாக மின்சாரம் பாய்ந்து 3 வது நபர் உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவர் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த இசைவாணனின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தற்போது வட தமிழக கடலோர பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது...
புயலின் முன்பகுதி தொடர்ந்து கரையை கடந்து வருகிறது
Chembarambakkam Lake water level report@ 20.00 hrs
Depth of Lake - 24.00 feet
Present status - 19.64 feet
Storage - 3645 mcft
Present status - 2515.00mcft
Inflow :5610.00 c/s(24hr)
Discharge Particularly:
134.00c/s (For metro)
Rainfall:1.20 mm
சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த வி. சக்திவேல் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் ரூ. 5 இலட்சம் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.11.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (War Room) நேரில் சென்று ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு. காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 333 கன அடியாக வந்த நீர்வரத்து இரவு 8 மணி நிலவரப்படி 4,364 கன அடியாக அதிகரிப்பு. மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில், தற்போது 2577 மி.கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
சென்னை : கடற்கரையில் ஆபத்தை உணராமல் பொங்கி வரும் கடல் அலையில் விளையாடும் இளைஞர்கள். போலீசார் பாதுகாப்பையும் மீறி வெவ்வேறு வழிகளில் கடற்கரைக்குள் நுழைந்து பொங்கி வரும் அலையில் கால்நனைத்து விளையாடி வருகின்றனர்.
நாளை காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக நாளையும் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வேத்துறை தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை ஜோலார்பேட்டை செல்ல இருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.