தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் உள்ள முக்கியமான அணைகளுள் உள்ள நீர்மட்டத்தை பார்போம்.
தமிழகத்தின் முக்கியமான அணைகளுள் ஒன்றான மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. இன்றைய நிலவரப்படி அணை நிரம்பியுள்ளது. அதவாது 120 அடியை எட்டியுள்ளது. அடுத்ததாக பவானிசாகர் அணை, 105 அடி நீர் மட்டம் கொண்ட இந்த அணையில் இன்றைய நிலவரப்படி 101 புள்ளி 98 அடி நீர் நிரம்பியுள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 57 புள்ளி 80 ஆக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருக்கும் நிலையில், தற்போது 142 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாக இருக்கும் நிலையில், இன்று 62 புள்ளி 27 அடியாக உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 143 அடி. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டமானது 137 புள்ளி 80ஆக அதிகரித்துள்ளது.
119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 91 புள்ளி 70 அடியாக உள்ளது. ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாக இருக்கும் நிலையில், இன்றைக்கு அணை நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை 124 புள்ளி 80 அடியை எட்டி நிரம்பியுள்ளது. 65 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையும் 129 அடி நீர்மட்டம் கொண்ட ஹராங்கி அணையும் நிரம்பியுள்ளன. ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருக்கும் நிலையில், மழையால் அந்த அணையும் நிரம்பியுள்ளது.