தமிழக பட்ஜெட் 2025 - 2026  முகநூல்
தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்காக ‘அன்புச்சோலை’ To 17,500 வேலைவாய்ப்புகள் | பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

திமுக அரசின் 5ஆவது மற்றும் கடைசி முழு பட்ஜெட். இதில் பல முக்கிய அறிவுப்புகள் வெளியாகி வருகின்றன. அவற்றுள் சில..

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது - பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. அடுத்த ஆண்டு தேர்தல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள திமுக அரசின் 5ஆவது மற்றும் கடைசி முழு பட்ஜெட். இதில் பல முக்கிய அறிவுப்புகள் வெளியாகி வருகின்றன. அவற்றுள் சில..

இந்து அறநிலையத்துறை:

இந்து சமய அறநிலையத்துறை 7188 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் பணி மேற்கொள்ள ரூ.125 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்:

  • உலக வங்கியின் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின்

  • கடனுதவியுடன் உரிமைத் திட்டத்தின் (RIGHTS) மூலம், 2024-25 ஆம் நிதியாண்டில் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக 10 வருவாய்க் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 38 வட்டார அளவிலான சேவை மையங்களும் தொடங்கப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஆறு வகையான மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  • இத்திட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து மாவட்டங்களிலும் 82 வருவாய்க் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் 400 வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்படுத்தப்படும்.

  • மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள் (Smart Vision Glasses), அறிவுசார் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணப் பெட்டகம் (TLM Kit) நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

மூத்த குடிமக்களுக்காக ‘அன்புச்சோலை’!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

இயற்கையினையும் உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்.

இத்திட்டத்தின் கீழ், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஆதரவற்றோர். தனித்து வாழும் முதியோர். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள். மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும்.

சென்னை , கோவை, மதுரை, திருச்சிக்கு: வேலைவாய்ப்பு!

  • நகர்புற சாலை பணிகளுக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு;

  • சென்னையில் ரூ 486 கோடியிலும், கோவையில் ரூ.200 கோடியிலும், மதுரையில் ரூ.130 கோடியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும்.

  • திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா 250 ஏக்கரில் உருவாக்கப்படும்; 5,000 வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும் .

  • மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா ரூ.250 கோடி மதிப்பீட்டில் உருவாக்கம்; 20,000 வேலைவாய்ப்புகள் இதன்மூலம் உருவாக்கப்படும்.

இருசக்கர மின் வாகனத்துக்கு மானியம்

2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்!

ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன்!/

ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம்!தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்!

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்!

நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!

மீன்பிடித் தடைக் காலத்தில் ரூ.8,000 வழங்கப்படும் - தங்கம் தென்னரசு

கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம்

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை!