வேளாண் பட்ஜெட் 2025 - 2026 pt
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட் 2025 - 2026|உழவர் நல சேவை மையம் முதல் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் வரை !

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கியுள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் . முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள்.

ஜெனிட்டா ரோஸ்லின்

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் :

1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் " "முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்.

ரூ 160 கோடி

நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய "நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்.

ரூ 24 கோடி

மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு.

ரூ 22 கோடியே 80 லட்சம்

மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் .

உழவர் நலத்துறை திட்டம்

உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை

ரூ. 142 கோடி

மண்வளத்தினை மேம்படுத்திட "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்.

ரூ.269.50 கோடி

தமிழ்நாட்டில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் "கலைஞரின் அனைத்துக் கிராம " ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.

ரூ.40 கோடியே 27 லட்சம்

மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க "மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்

ரூ.108 கோடியே 6 லட்சம்

உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் .

ரூ.52 கோடியே 44 லட்சம்

சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்.

உழவர்களுக்கு முழு மானியம்

உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம்.

உழவர்களுக்கு முழு மானியம்

உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ்

இயற்கை வேளாண்மைத் திட்டங்கள்

ரூ. 21 கோடி

ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதாரச் சுமையினைக் குறைக்கும் திட்டம் .

ரூ. 60 லட்சம்

வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறியவும் விவசாயிகளுக்கு பரிசுகள் .

ரூ. 6 லட்சம்

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது.

ரூ. 12.50 கோடி

நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் .

39,500 மெட்ரிக் டன்

உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.

ரூ. 250 கோடி

உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல்.

ரூ. 15.5 கோடி

7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுதல் .