தமிழ்நாடு

சுடுநீரை வெளியேற்றுவதால் மீன்வளம் பாதிப்பு: அனல்மின் நிலையத்தில் மீனவர்கள் போராட்டம்

kaleelrahman

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுநீரால் மீன்வளம் பாதிப்பதாகக் கூறி மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம், சிவன்படைவீதி, சின்னகுப்பம், பெரியகுப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்தை சேர்ந்த 600 மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் கருப்பு கொடி கட்டி கழிமுக பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுநீரை ஆற்றில் விடுவதால் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து வருவதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது. சுடுநீர் வெளியேறும் இடத்தில் படகுகளால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றில் விடப்படும் சுடுநீரை மாற்று வழியில் விட வேண்டும், முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தற்போத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.