ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் தரையில் 6 மணி நேரமாக நகராமல் நிலைகொண்டுள்ளது. குறிப்பாக கடலூருக்கு அருகே 30 கி்மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு உட்பட 21 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.