மழை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

26 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு?

கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 26 ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 26 ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.