30 மாவட்டங்களில் மதியம் வரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.