தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று ( ஜனவரி 24) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், உள் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.