தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு?

கொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு?

webteam

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை, அரசுக்கு இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அதில், கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் 10 நாளுக்கு மொத்தம் 2,31,870 ரூபாய் வரை வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.25,377ஐ கட்டணமாக வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு 17 நாட்களுக்கு சேர்த்து கட்டணமாக ரூ. 4,31,411 வசூலிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.