தமிழ்நாடு

இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

webteam

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவரும் இளவரசி, 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. 

இளவரசி தனது பரோல் மனுவில் சகோதரர் உடல்நிலை நலிவுற்று இருப்பதாகவும், அவரை கவனித்துக்கொள்ள பரோல் வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று இளவரசிக்கு 15 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.

உடல் நிலை, ரத்த உறவுகளின் உடல்நிலை ஆகியவற்றை காரணம் காட்டி, பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதி உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது