மார்கழி மாதம் துவங்கியிருக்கும் நிலையில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காக சென்றார்.
அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார்.இந்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாக மாறியது.
இந்நிலையில், இதுக்குறித்து விளக்கமளித்துள்ள கோவில் நிர்வாகம், ”ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது” என்று தெரிவித்துள்ளது.