குட் பேட் அக்லி  pt
தமிழ்நாடு

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு வந்த சிக்கல்...இளையராஜா கொடுத்த நோட்டீஸ்!

குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படம் என அடுத்தடுத்த அஜித் திரைப்படங்கள் வெளியானது அஜித் ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியது. கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் கூட திரையரங்குகளில் நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

குறிப்பாக, இந்தப் படத்தில் இளையராஜா இசையில் வெளியான ‘நாட்டுப்புற பாட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ‘என் ஜோடி மஞ்சள் குருவி’, ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பல ரெட்ரோ பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில், தனது இசையில் உருவான பாடல்களான 'ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ’ ஆகிய பாடல்கள் அனுமதியின்றி குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்பட்டிருப்பதாக கூறிய இளையராஜா, தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடல் ஒழுப்பரப்படுவதும் நிறுத்தப்படவேண்டும் என்கிற அடிப்படையிலும் இந்த் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.