மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சென்னை ஐஐடியில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சுப்பிரமணியன், ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டறிந்துள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று சென்னை வரவுள்ளார். இதனிடையே, மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃபிடம் மத்திய குற்றப்பிரிவு சிறப்புக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில், அப்துல் லத்தீஃபிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பாத்திமாவின் மடிக்கணினி மற்றும் செல்ஃபோனை ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், மேலும் சில ஆவணங்களை சிறப்புக்குழுவிடம் கொடுத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் லத்தீஃப், தனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என நம்புவதாக கூறினார்.