அரியவகை உயிரினமான உடும்பை வேட்டையாடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் அரியவகை உடும்பை சிலர் வேட்டையாடியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றாலம் வனப்பகுதியில் சிலர் அரியவகை உயிரினங்களை வேட்டையாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தநிலையில், வனத்துறையினர் ரோந்துபணியை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.